இயக்குநரைத் திருமணம் செய்தார் நடிகை யாமி கெளதம் (படங்கள்)

இயக்குநரைத் திருமணம் செய்தார் நடிகை யாமி கெளதம் (படங்கள்)

கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 
Published on

நடிகை யாமி கெளதம், உரி பட இயக்குநர் ஆதித்யா தர்-ரைத் திருமணம் செய்துள்ளார்.

2009-ல் திரையுலகில் அறிமுகமான யாமி கெளதம், ஏராளமான ஹிந்திப் படங்களிலும் கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர்-ரை மும்பையில் திருமணம் செய்துள்ளார் யாமி கெளதம். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். பாடலாசிரியராக ஹிந்தி திரையுலகில் நுழைந்த ஆதித்யா தர், சில படங்களுக்கு வசனம் எழுதினார். 2019-ல் உரி - தி சர்ஜிகல் ஸ்டிரைக் என்கிற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com