

அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத் ராகவேந்திரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.
மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத்.
பிப்ரவரி 1, 2020 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டார். மஹத் - பிரச்சி திருமண நிகழ்வில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
பிரச்சி மிஸ்ராவுக்குச் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மகனுக்கு அதியமான் ராகவேந்திரா எனப் பெயர் சூட்டியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் மஹத். நல்ல தமிழ்ப் பெயரைக் குழந்தைக்குச் சூட்டியுள்ளதாகப் பலரும் மஹத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.