
மூத்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
2009-ல் ஜோஷ் என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, அடுத்த ஆண்டு கே.வி. ஆனந்தின் கோ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார். மூத்த நடிகை ராதாவின் மகள் என்பதால் இவருடைய வருகை தமிழ்த் திரையுலகில் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, வா டீல் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார் கார்த்திகா. ராதிகா, அம்பிகா கலந்துகொண்ட பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.