இயக்குநர் ஜனநாதனுக்குத் தீவிர சிகிச்சை: இயக்குநர் அமீர் அறிக்கை

உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
இயக்குநர் ஜனநாதனுக்குத் தீவிர சிகிச்சை: இயக்குநர் அமீர் அறிக்கை

முன்னணி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய உடல்நிலை பற்றி இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2003-ல் இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.பி. ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவருடைய முதல் படமான இயற்கை, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. தற்போது விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் நடித்துள்ள லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று, லாபம் படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் இருந்த ஜனநாதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் படத்தொகுப்புப் பணிகளுக்குத் திரும்பாததால் அவருடைய உதவியாளர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தார்கள். அங்கு சுயநினைவின்றி இருந்துள்ளார் ஜனநாதன். உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதால் இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு நேற்றைய தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com