
காதல் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற விருச்சிககாந்த் காலமானார்.
2004-ல் வெளியான பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் விருச்சிககாந்த். அவருடைய இயற்பெயர், பாலாஜி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். காதல் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரை அழைத்து நடிக்க வைத்தார் பாலாஜி சக்திவேல். நடிச்சா ஹீரோ சார்... நான் வெயிட் பண்றேன் சார்... அப்புறம் சி.எம்., அப்புறம் டெல்லி... இதுபோதும் சார்... என்று அவர் பேசிய வசனம் தனி அடையாளத்தை அளித்தது. பிறகு விகடகவி, தூங்காநகரம், வேட்டைக்காரன் போன்ற படங்களிலும் நடித்தார். பெற்றோர் இறந்த பிறகு நடிப்பில் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
சென்னை சூளையில் நடைபாதையில் வசித்து வந்த விருச்சிககாந்த், அதே பகுதியில் உள்ள ஆட்டோவில் தூங்கி வந்தார். இந்நிலையில் ஆட்டோவிலேயே உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.