
இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.
லாக்கப், க/பெ. ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இதையடுத்து மதில் என்கிற படமும் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி. பாலமுருகன், படத்தொகுப்பு - எம். தியாகராஜன்.
இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது:
இதுவரை நான் குடும்பப் படங்கள் அல்லது நகைச்சுவைப் படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூகப் படம் இயக்கியுள்ளேன். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கியப் பிரச்னை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தைக் கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் மதில் படத்தில் விளக்கப்பட்டுள்ளது என்றார்.
மதில் படம் ஏப்ரல் 14 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.