பருத்திவீரனில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்

அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது.
பருத்திவீரனில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்
Published on
Updated on
1 min read

கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்த பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார். 

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான படம் - பருத்திவீரன். இந்தப் படத்தில் அப்பத்தாவாக நடித்து கவனம் பெற்றார் பஞ்சவர்ணம்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார் பஞ்சவர்ணம். இதையடுத்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது: 

பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

twitter.com/Karthi_Offl
twitter.com/Karthi_Offl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com