கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் ஜூலை 16 அன்று கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்நிலையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 31-வது படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...