ஜூனியர் என்டிஆர் பிறந்த நாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழு

ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஜூனியர் என்டிஆர் பிறந்த நாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழு

ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளுக்காகப் புதிய போஸ்டரை ஆர் ஆர் ஆர் படக்க்குழு வெளியிட்டுள்ளது.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. 

ஜூனியர் என்டிஆர், 2001 முதல் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இன்று, தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஜூனியர் என்டிஆர். கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளுக்காகப் புதிய போஸ்டரை ஆர் ஆர் ஆர் படக்க்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com