

ரஜினியும் மோகன் பாபுவும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
திரையுலகின் ஆரம்பக் காலத்திலிருந்து ரஜினியும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நண்பர்களாக உள்ளார்கள். நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இருவருடைய நட்பும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஜினியும் மோகன் பாபுவும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அப்படங்களை மோகன் பாபுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அசத்தலாக உள்ள இப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.