
கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை முதலில் மறுத்து வந்த ப்ரியா, மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் அடுத்து நடித்தார்.
இந்தியன் 2, ருத்ரன், பொம்மை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, கசட தபற, இயக்குநர் ஹரி - அருண் விஜய் படம் போன்ற ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், அடுத்ததாக இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷால். ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய கேள்வியை ரசிகர் ஒருவர், ப்ரியா பவானி சங்கரிடம் எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
சகஜ நிலைமை திரும்பிய பிறகு பட விவரங்கள் அறிவிக்கப்படும். தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.