
பில்போர்ட் இசை விருது விழாவில் கணவருடன் இணைந்து கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, அதன் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற பில்போர்ட் இசை விருது விழாவில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் கலந்துகொண்டார்கள். இருவரும் தொகுப்பாளர்களாகப் பணியாற்றினார்கள்.
விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.