

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான குருப் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
நடிகர் துல்கர் சல்மான் தமிழ் , மலையாளப் மொழிகளில் மிக கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கடைசியாக அவர் நடித்து தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அவர் அடுத்த படமாக கேரளாவில் புகழ்பெற்ற குற்றாளிகளில் ஒருவரான சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ’குருப்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
துல்கர் தயாரித்த இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தயாரான இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.