ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த அண்ணாத்த பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
சன் பிக்சா்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோா் நடித்த அண்ணாத்த படம், தீபாவளி அன்று உலகெங்கிலும் வெளியானது.
இந்நிலையில் ரஜினிக்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசியாக பாடிய பாடல் - அண்ணாத்த அண்ணாத்த. இமான் இசையமைப்பில் விவேகா எழுதிய இப்பாடலின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.