கணவரைப் பிரிகிறாரா பிரியங்கா சோப்ரா ?: சமூக வலைதளங்களில் பெயர் மாற்றத்தால் பரபரப்பு

பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது கணவரின் பெயரை நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கணவரைப் பிரிகிறாரா பிரியங்கா சோப்ரா ?: சமூக வலைதளங்களில் பெயர் மாற்றத்தால் பரபரப்பு
Published on
Updated on
1 min read


கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் நடிகர் விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஹிந்தியில் கால் பதித்த அவர் தொடர்ந்து அங்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். நிறைய ஆங்கிலப் படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார். 

தற்போது ஆங்கிலப் படமான 'மேட்ரிக்ஸ் 4'  படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னை விட 10 வயது இளையவரான பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த 2018 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா காதலித்து கரம் பிடித்தார். பிரபலமான ஜோடிகளான இவர்கள் சமீபத்தில் ஆஸ்கர் விருது விழாவையும் ஒன்றாக தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரியங்காவின் நண்பர்கள் இதனை மறுத்துள்ளனர். 

முன்னதாக நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார் என்பதும் பின்னர் இருவரும் பிரிவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com