

தமிழில் விஜய்யின் 'காதலுக்கு மரியாதை', 'அலைபாயுதே', நடிகர்அஜித்தின் 'கிரீடம்' போன்ற பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை கேபிஏசி லலிதா. தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'மாமனிதன்' படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் பரதனின் மனைவியான இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கென்றே கேரளாவில் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றன.
இதையும் படிக்க | அப்பாவான பிக்பாஸ் ஆரவ் : பிரபலங்கள் வாழ்த்து
இந்த நிலையில் இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்து வந்துள்ளது. அவரது மருத்துவ செலவுகளை ஏற்பதாக கேரள அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவரது தீவிர ரசிகரும் நடிகருமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் வழங்க முன்வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.