'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா?

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா?

'மாநாடு' படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது. இந்தப் படத்தில் அவரது பங்களிப்பும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் ஒன்றை வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த வெங்கட் பிரபு, ''முதலில் தனுஷ்கோடி என்ற வேடத்துக்கு அரவிந்த் சாமியை அனுகியதாகவும், அவருக்கு கதை பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவத்தாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் படம் தாமதமானதன் காரணமாக அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. அவர் அப்போது வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்'' என்று தெரிவித்திருந்தார்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக மாநாடு படத்துக்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த சாமி, இந்தக் கதையை நேசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தப் படம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக அரவிந்த் சாமி அந்த வேடத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களிடையே விவாதம் உருவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com