விடியோ: கஷ்டத்தைக் கூறி கண்கலங்கிய இசைவாணி: எதிர்த்து பேசிய ராஜு: துவங்கிய மோதல் ?

தங்களது கஷ்டத்தைக் கூறிய இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோரை ராஜு ஜெயமோகன் எதிர்த்துப் பேசிய ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது. 
விடியோ: கஷ்டத்தைக் கூறி கண்கலங்கிய இசைவாணி: எதிர்த்து பேசிய ராஜு: துவங்கிய மோதல் ?
Updated on
1 min read

தங்களது கஷ்டத்தைக் கூறிய இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோரை ராஜு ஜெயமோகன் எதிர்த்துப் பேசிய ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று (அக்டோபர் 5) வெளியான ப்ரமோவில் போட்டியாளர்கள் முன்பு பேசும் இசைவாணி, தன்னுடைய வாழ்வின் கடினமான நேரங்கள் குறித்து மிக உருக்கமாக பேசுகிறார். அதனைக் கேட்கும் போட்டியாளர்கள் கண் கலங்குகின்றனர். 

இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் பேசும் ராஜு, சின்னப்பொண்ணு மற்றும் இசைவாணியின் பேச்சு குறித்து கருத்து கூறுகிறார். அப்போது பேசும் அவர், கலைஞர்கள் யாரும் தங்கள் கஷ்டத்தை பேசக் கூடாது. மக்கள் நம்மை பார்க்கும்போது சிரிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். 

கஷ்டத்தை சொல்லக் கூடிய மேடைதான் இது. எல்லோரும் நம்மை பாராட்டினால் நாம் வளர மாட்டோம். நம் நடந்து போகும்போது எதிரே சுவர் இருந்தால் தான் அதனை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று தம்பஸ் அப்பை தலைகீழாக இருக்கும்படி அவர்களுக்கு வழங்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com