'அந்த பேட்டியால் மன உளைச்சலாக இருக்கிறது': பிக்பாஸ் அபிஷேக்கின் முன்னாள் மனைவி வேதனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவு வைரலாகி வருகிறது.
'அந்த பேட்டியால் மன உளைச்சலாக இருக்கிறது': பிக்பாஸ் அபிஷேக்கின் முன்னாள் மனைவி வேதனை
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா. இவர் சமூக வலைதளங்களல் மிகப் பிரபலம். அவ்வப்போது சினிமா தகவல்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபலங்களை தனக்கே உரிய பாணியில் நேர்காணல் நடத்தி எதிர்மறையான விமரிசனங்களை சந்தித்தார். 

இந்த நிலையில் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நமக்கு ஒரு துக்கமான நிகழ்வு நடந்தால் அதில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும். 

ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் நம்மை வேண்டும் என்றே நம்முடைய கடந்த காலத்தில் ஒரு பகுதியைத் தூண்டி விடுவதால் நம்முடைய ஒரு நாள் அல்லது ஒரு வாரம் சோகமயமாகி விடுகிறது.  

 3 வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இருந்து நான் விலக முடிவு செய்த போது, எல்லா செயல்களையும் நானே செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். இது தனிப்பட்ட முடிவு. என்று குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில், திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அந்த பேட்டி விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. எனவே அந்த பேட்டியை நீக்கி விடுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் சம்மந்தப்பட்ட நிறுவனம் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் என்னுடைய முன்னாள் கணவர் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதால் அவர் குறித்து தேடும்போதும் இந்த பேட்டி தான் வருகிறது. அந்த பேட்டி பற்றி என்னிடம் பலரும் பேசும்போது மிகவும் மன உளைச்சல் ஏற்படுகிறது. என்று தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com