கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'என் கணவர் இறந்தபொழுது...' - பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத பவானி ரெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரமோவில் பவானி ரெட்டி தன் கணவர் இறந்தது குறித்து மிக உருக்கமாக பேசுகிறார். 

News image
Updated On :8 அக்டோபர் 2021, 5:44 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரமோவில் பவானி ரெட்டி தன் கணவர் இறந்தது குறித்து மிக உருக்கமாக பேசுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்கள் பட்ட கஷ்டங்கள், அதனை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று கூறி தாங்கள் பிக்பாஸ் டைட்டில் வெல்ல ஏன் தகுதியானவர்கள் என்று மற்ற போட்டியாளர்கள் முன்பு பேச வேண்டும்.  அவர்களது பேச்சைக்கேட்கும் மற்ற போட்டியாளர்கள், அவர்களது உரை குறித்து மதிப்பிட வேண்டும். 

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக தங்கள் கதைகளை மற்ற போட்டியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், போட்டியாளர்கள் முன்பு நடிகை பவானி ரெட்டி அழுதுகொண்டே பேசுகிறார். 

அதில், எனது கணவர் இறந்தபொழுது எனக்கு அழுகை வரவில்லை. கோபம் தான் வந்தது. எங்களுக்கு நிறைய கனவுகள் இருந்தன. இருவரும் கடினமான காலங்களை எதிர்கொண்டோம். ஆனால் பாதியில் அவர் என்னை விட்டுப்போனதால் அவர் எனக்கு கோபம் வந்தது. அவரை மிகவும் நேசித்தேன்.  என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டார். எனக்கு வாழ்க்கையில் தனியாகவே இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என மிகவும் உருக்கமாக பேசுகிறார். அவர் பேச்சை போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கியபடி கேட்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.