
விமல் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கவிருக்கிறார்.
விஜய் நடிப்பில் செல்வா, நிலாவே வா, பகவதி, சிம்புவின் குத்து, தம், சரத்குமார் நடிப்பில், ஏய், சாணக்யா, அருண் விஜய் நடிப்பில் மலை மலை, மாஞ்சா வேலு, அர்ஜூனின் வாத்தியார், துரை போன்ற பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். மேலும் அங்காடித் தெரு, அசுரன் போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார்.
இவர் இயக்கும் புதிய படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை வி. பழனிவேல் தயாரிக்க, நடிகர் தம்பி ராமையா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அம்ரீஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா பூஜையுடன் இன்று (09.10.201) நடைபெற்றது.
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், இது வழக்கமான பேய் படம் அல்ல. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கப்படவிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.