
ஓ மணப்பெண்ணே படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக நாதியா சங் வெளியேறினார். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியா பவானி ஷங்கர் நுழைய விருப்பதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் அவர் போட்டியாளராக நுழையவில்லை. ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தைப் விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் செல்லவிருக்கிறார்.
இதையும் படிக்க | 'மெட்டி ஒலி' தொடர் புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்
அவருடன் ஹரிஷ் கல்யாணும் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருக்கிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நல்ல வெற்றியைப் பதிவு செய்த பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.