
அனிருத்தின் காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா நடனம் ஆடும் விடியோ நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் ரேஷ்மா. அந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரவேற்பைப் பெற்றார்.
இதையும் படிக்க | அசுர வளர்ச்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்
இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் நெகட்டிவ் வேடத்தில் கலக்கினார். பின்னர் அந்தத் தொடரில் பாதிய விலகிய அவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நந்திதா ஜெனிஃபருக்கு பதிலாக ராதிகாவாக நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் அனாமிகாவாகவும் நடித்துவருகிறார்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் விடியோக்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை சோனாவுடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு நடனமாடும் விடியோவை பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.