குடியரசுத் தலைவருடன் நடிகர் ரஜினி சந்திப்பு

மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.
Updated on
1 min read

மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.

தில்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர் என பலர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com