
மலேசியாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் 'வலிமை' என்ற பெயரில் கிருமிநாசினியை அறிமுகம் செய்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 'வேற மாரி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மலேசிய அஜித் ரசிகர்கள் சார்பில் 'வலிமை' என்ற பெயரில் கிருமிநாசினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். பொதுவாக நடிகர் அஜித் , ரசிகர்கள் விஷயத்தில் அமைதி காத்தாலும், ரசிகர்கள் அவர் மீது காட்டும் அன்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதற்கு இந்தக் கிருமிநாசினி ஒரு உதாரணம்.
'கபாலி' படத்தின் வெளியீட்டின் போது அதன் தயாரிப்பாளர் தாணு விமானத்தில் விளம்பரம் கொடுத்தார். அவராவது தயாரிப்பாளர். புதுமையான முறையில் அவரது படத்துக்கு விளம்பரம் கொடுப்பதில் ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தில் இவ்வாறு செய்திருப்பது, அஜித் மீது அவர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பையே காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.