புகைப்படம் பகிர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஜி.பி.முத்து உறுதி செய்த நிலையில், நடிகர் சதீஷ் நகைச்சுவையாக அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சி, 4 சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் 5வது சீசன் நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க| போதைப் பொருள் வழக்கு: சூர்யா, கார்த்தி பட நடிகையிடம் விசாரணை
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அந்த வகையில் டிக் டாக் செயலியின் மூலம் புகழ் பெற்ற ஜி.பி,.முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டின் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தான் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து நடிகர் சதீஷ், ''பிக்பாஸ் வீட்டில் கடிதங்களை படிக்க விட்டுவிடாதீர்கள். என்ன டாஸ்க் கொடுக்கிறீர்கள் செத்த பயலுவலா நார பயலுவலா'' என நகைச்சுவையாக கருத்து கூறியுள்ளார்.