
அரண்மனைக் கிளி புகழ் பிரபல நடிகை நீலிமா ராணி தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானவர் நடிகை நீலிமா ராணி. கோலங்கல், அத்தி பூக்கள், தாமரை, செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பைப் பெற்றன.
சின்னத்திரைத் தொடர்கள் மட்டுமல்லாமல் குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, தொடரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ,,எங்களுக்கு திருமண நாள். வரும் ஜனவரி மாதம் நாங்கள் 4 பேராக போகிறோம். இன்னும் 20 வாரங்கள் தான் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.