

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (புதன் கிழமை) துவங்குகிறது. இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, ஜெயராம், நடிகை அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, பேட்ட படத்தின் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ தான் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தை முதலில் தயாரிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் துவக்கவிழாவில், நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ஜெயராம், இயக்குநர் ஷங்கர், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.