திரையரங்குகளில் நாளை(செப்-9) வெளியாகிறது ’லாபம்’

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் நாளை (செப்-9) திரையரங்குகளில் வெளியாகிறது.
திரையரங்குகளில் நாளை(செப்-9) வெளியாகிறது ’லாபம்’
திரையரங்குகளில் நாளை(செப்-9) வெளியாகிறது ’லாபம்’
Published on
Updated on
1 min read

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் நாளை (செப்-9) திரையரங்குகளில் வெளியாகிறது.

இயற்கை, ஈ ,புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். அதனைத் தொடர்ந்து நடிகர்  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7C என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் லாபம் படத்தின் டிரெய்லர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் கடந்த மார்ச் மாதம் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானர்.

பின் லாபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.  எனினும் தயாரிப்பு நிறுவனம் எஞ்சிய அனைத்துப் பணிகளையும் முடித்து, ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது இப்படம் நாளை (செப்-9) திரையரங்கில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com