ஒலிம்பிக் வீராங்கனைக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த சசிகுமார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவியை சந்தித்து தன் அன்பளிப்பை வழங்கியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.
சசிகுமாருடன் பவானி தேவி
சசிகுமாருடன் பவானி தேவி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவியை சந்தித்து தன் அன்பளிப்பை வழங்கியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பவானி தேவியை நடிகரும் இயக்குநருமான சசிகுமார் சந்தித்து தன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டதோடு அவருக்கு தங்கச் சங்கிலி ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்.

இதுகுறித்து சசிகுமார் நடித்து வரும் ’உடன் பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தன்னுடைய டிவிட்டர் பக்க்கதில் ‘வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார் .நல்லமனம் வாழ்க ’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com