திருமணம் மற்றும் அன்புடன் குஷி தொடர்களில் நடித்திருந்த ஸ்ரேயா அஞ்சன் ஐந்து உணர்வுகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் தொடரில் சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருந்தனர்.
இருவரும் உண்மையாகவே காதலிக்கத் துவங்கினர். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் பகிர அவை அடிக்கடி வைரலாகின. திருமணம் தொடர் முடிவடைந்த பிறகு சித்து ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன் அன்புடன் குஷி தொடரிலும் நடித்தனர்.
இந்த நிலையில் ஸ்ரேயா அஞ்சன் தற்போது ஐந்து உணர்வுகள் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை பாரதியார், பெரியார், மோகமுள் படங்களின் இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆர். சூடாமணி எழுதிய அம்மா பிடிவாதக்காரி என்ற கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.