அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்து வரும் புஷ்பா படத்தில் இருந்து ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்து வரும் படம் புஷ்பா. அல வைக்குந்தபுரமுலோ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | நாளை(செப்-30) வெளியாகிறது ‘சிவகுமாரின் சபதம்’
இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து ஃபகத்தின் தோற்றத்தை விளக்கும் விதமாக வெளியான போஸ்டர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் இன்று ராஷ்மிகாவின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா , ஸ்ரீவள்ளி என்ற வேடத்தில் நடிக்கிறார். புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. திருப்பதி அருகே இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


