வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் துவங்கிய தினமும், எம்.எஸ்.தோனி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட தினமும் ஒரே தினம் (ஆகஸ்ட் 6) என்பதால், இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் நடிகர் அஜித்தின் 'ஜீ', விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதனையடுத்து அவர் இயக்குநராக அறிமுகமான படம் 'சென்னை 28'. எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 15 வருடங்களுக்கு முன் அதாவது 2006 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 7) துவங்கப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. 15 வருடங்களுக்கு முன் நான் என் முதல் படத்தை துவங்கினேன். கடவுளும், நீங்களும் என்னைத் தொடர்ந்து பயணிக்க உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்கள் மனதில் இடம் அளித்ததற்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க| சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்த மம்மூட்டி
இந்த நிலையில் கிரிக்கெட் எம்.எஸ்.தோனியும் கடந்த 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு இன்றைய தினம் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பந்தங்களையும் தொடர்புபடுத்தி ரசிகர்கள், எம்.எஸ்.தோனி மற்றும் வெங்கட் பிரபுவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Wow time flies!! 15 years ago today first time I said âstart camera actionâ!! God and u guys are very kind and still keeping me going!! Forever indebted to u guys for giving me a place in ur heart. Love u @charanproducer na #chennai600028 #EngaAreaUllaVaradhey pic.twitter.com/rRY5nPvtM0
â venkat prabhu (@vp_offl) August 7, 2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் போக்ஸோவில் கைது!

இன்றைய மின் தடை அறிவிப்பு ரத்து

சாத்தான்குளம் அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

சாத்தான்குளத்தில் சேவல் சண்டை போட்டி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



