கேரளத்தின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைத்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியான 'அனுபவங்கள் பலிச்சாக்கல்' என்கிற திரைப்படம் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்தார்.
பின் இதுவரை தமிழ்,மலையாளம்,கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி , மராத்தி என ஆறுமொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சிறந்த நடிப்பிற்காக 3 முறை தேசிய விருதும் , 6 முறை மாநில அரசின் விருதும் , பத்மஸ்ரீ மற்றும் இரண்டு கௌவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
'வடக்கன் வீரகதா' 'பழசிராஜா' 'பேரன்பு' போன்ற தனித்துவமான படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது .
தற்போதும் இளம் நடிகர்களுக்கு இணையாக அதே இளமையின் உற்சாகம் கொண்டு நடித்து வருகிறார். 50 வது ஆண்டைக் கடக்கும் மம்மூட்டிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு உச்ச நட்சத்திரமான மோகன்லாலும் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார்.