நடிகர் பிரகாஷ் ராஜ் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு விரைவில் அறுவைச்சிகிச்சை செய்யப்படவிருக்கிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் வில்லன், குணச்சித்திர வேடம் என தனது நடிப்பாற்றலால் பல்வேறு பரிணாமங்களில் மிரட்டி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
மிரட்டலான வில்லனாக ஒருபுறம் கில்லி, போக்கிரி என மிரள வைத்தால், குணச்சித்திர வேடங்களில் நடித்த மொழி, அபியும் நானும் என தனது நடிப்பால் நெகிழச் செய்வது அவரது சிறப்பு. மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் தனுஷ் உடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில், நான் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஹைதராபாத் சென்று கொண்டிருக்கிறேன். எனது நண்பரும் மருத்துவருமான குருவா ரெட்டி எனக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். நான் நலம் பெறுவேன். கவலைப்படத்தேவையில்லை. என்னைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



