
சுசீந்திரன் இயக்கிய கென்னடி கிளப் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தராஜன். மதுரையைச் சேர்ந்தவர். வில்லா டூ வில்லேஜ், சரவணன் மீனாட்சி சீசன் 4 எனத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த மீனாட்சி, தற்போது தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மீனாட்சி போன்றோர் நடிக்கிறார்கள். கோப்ரா படத்தில் தன்னை வைத்து 45 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றன என்கிறார் மீனாட்சி. அந்தளவுக்கு அவருடைய கதாபாத்திரத்துக்குப் படத்தில் முக்கியத்துவம் உள்ளது.
இதையும் படிக்க | நடிகை திவ்யா துரைசாமியின் சமீபத்திய புகைப்படங்கள்
இதையும் படிக்க | தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி புகைப்படங்கள்
இதையும் படிக்க | இன்ஸ்டகிராமைக் கலக்கும் கிரிக்கெட் வீரர் விஹாரி மனைவியின் புகைப்படங்கள்
முகேன் கதாநாயகனாக நடிக்கும் வேலன், சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் சிவ சிவா எனத் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் மீனாட்சி.