பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் மரணம்

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் மரணமடைந்தார். 
பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் மரணம்

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் மரணமடைந்தார். 

கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் சன் மியூசிக் தொகுப்பாளராக  கலக்கியவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரில் தொகுப்பாளராக தன் வாழ்வைத் துவங்கிய ஆனந்த கண்ணன், சென்னையில் ரேடியோ ஒன்றில் ஆர்ஜேவாக  பணியாற்றினார். அப்போது அவருக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

அவரது வசீகரமான உடல் மொழி மற்றும் குரலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதமும்  ரசிகர்ளை வெகுவாகக் கவர்ந்தன. இதனால்  இளைஞர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். மேலும் அவர் சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சிந்துபாத் தொடரில் அவரது நடிப்பை யாராலும் மறந்து விட முடியாது. 

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று மரணமடைந்தார். அவருக்கு  இயக்குநர் வெங்கட் பிரபு தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக, ''எனது சிறந்த நண்பனும், நல்ல மனிதருமான ஆனந்த கண்ணன் இன்று நம்மிடையே இல்லை. ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com