
2018 முதல் உலகளவில் அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சம்பளம் ரூ. 400 கோடி.
36 வயது ஸ்கார்லெட் ஜோஹன்சன், நகைச்சுவைக் கலைஞர் கோலின் ஜோஸ்டைக் கடந்த வருடம் திருமணம் செய்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
லாஸ்ட் இன் டிரான்ஸ்லேசன், கேர்ள் வித் அ பேர்ல் இயரிங், மேரேஜ் ஸ்டோரி, ஜோஜோ ரேபிட், மேட்ச் பாயிண்ட் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். 2008-ல் கனடாவைச் சேர்ந்த நடிகரான ரையன் ரெனால்ட்ஸை முதலில் திருமணம் செய்தார். 2011-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. பிரான்சைச் சேர்ந்த ரொமைனை 2014-ல் திருமணம் செய்தார். 2017-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ரோஸ் என்கிற 6 வயது மகள் உண்டு. பிறகு 38 வயது நகைச்சுவைக் கலைஞரான கோலின் ஜோஸ்டைத் திருமணம் செய்தார்.
இந்நிலையில் ஸ்கார்லெட்டுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் கோலின் ஜோஸ்ட். எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அவன் பெயர் காஸ்மோ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.