
ஓணம் பண்டிகையையொட்டி சிறப்புப் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகைகள் தங்களது பண்டிகை கொண்டாட்டங்களை புகைப்படங்கள் மூலம் காட்சிகளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தீயாய் பரவும் அனுபமாவின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் : டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
இந்த வரிசையில் சமீபத்திய நடிகையாக இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் ஓணம் கொண்டாட்டப் புகைப்படங்களுக்காகக் காத்திருப்பதாக சமூக ஊடகங்களில் காலை முதல் பதிவுகள் தென்பட்டு வந்த நிலையில், மாலையில் அவர் புகைப்படத் தொகுப்பையே வெளியிட்டுள்ளார்.