முடிவுக்கு வந்த வடிவேலு-ஷங்கர் மோதல்

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  
முடிவுக்கு வந்த வடிவேலு-ஷங்கர் மோதல்

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள “எஸ்” பிக்சர்ஸ் ஷங்கர், “23-ஆம் புலிகேசி 2” திரைப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். 
மேற்படி புகார் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ், நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 
இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது ஷங்கர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 
புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்னையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com