
பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!
ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம்.
’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!
இதற்கடுத்து அவர் யாரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விக்ரமுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் சேர்ந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் விக்ரம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘மகான்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.