
சமந்தா முதன்மை வேடத்தில் நடிக்கும் யசோதா படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 6) துவங்கியது. இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்குகின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க | 200 மில்லியன் ஆதரவாளர்கள்: யூடியூப் தளத்தில் சாதனை படைத்த இந்திய நிறுவனம்
இதுமட்டுமல்லாமல் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் சமந்தா நடிக்கவிருக்கிறார். மேலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருக்கிறார். புஷ்பா திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது.