
தமிழில் 'நிலவே மலரே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான். தொடர்ந்து 'புதுப்புது அர்த்தங்கள்', 'கல்கி', 'சங்கமம்', 'ராம்', 'சிங்கம் 2', '36 வயதினிலே' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இவர் நடித்த 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', ஜெயம் ரவியின் 'ஜன கண மன', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மோசன் போஸ்டர் விடியோ வெளியானது
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும், நடிகர் ரகுமானின் மனைவியும் சகோதரிகள். நடிகர் ரகுமானுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இவரின் மூத்த மகள் ருஷ்டா ரஹ்மான் மற்றும் அல்தாப் நவாப் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் திரு. ரஹ்மான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான் - அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமைக்கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். pic.twitter.com/8fZEpF5gPD
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2021