இன்று வெளியாகும் 'வலிமை' பட ப்ரமோ காட்சிகள் ?
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹுமா குரேஷி, புகழ், சுமித்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் ப்ரமோ காட்சிகள் இணையத்தில் இன்று (14/12/2021) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வலிமை என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.