சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': ஜி.வி.பிரகாஷ் - அனிருத் இணைந்து பாடிய பாடல் விடியோ

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': ஜி.வி.பிரகாஷ் - அனிருத் இணைந்து பாடிய பாடல் விடியோ

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பாடிய பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
Published on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலின் சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com