
சந்தா விலையைக் குறைத்த நெட்பிளிக்ஸ்!
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தா விலையைக் குறைத்திருக்கிறது.
பிரபல தனியார் ஓடிடி தளமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது நெட்பிளிக்ஸ். பல்வேறு மொழிப்படங்களும் சுவாரஸ்யமான கதைகளுடன் இத்தளத்தில் கிடைப்பதால் பயனர்களின் விருப்பமான ஓடிடி தளமாகவும் நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தின் சந்தா உறுப்பினராக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் , இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன் சந்தா விலையைக் குறைக்க இருக்கிறது.
அதன் படி , ஆரம்ப சந்தா விலையை ரூ.199-விலிருந்து ரூ.149 ஆக குறைப்பதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதை கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்து ரூ.499 க்கு டிவி மற்றும் கைப்பேசியில் பார்க்கும் வசதி ரூ.199 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் , இந்திய நெட்பிளிக்ஸ் பயனர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், நெட்பிளிக்ஸ் விலைகளைக் குறைப்பதற்கு முன்பாகவே அமேசான் பிரைம் தளம் ஆண்டு சந்தா கட்டணத்தை ரூ.999 -விலிருந்து ரூ.1499 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
It's happening! Everybody stay calm!
— Netflix India (@NetflixIndia) December 14, 2021
In case you missed it, you can now watch Netflix on any device at #HappyNewPrices. pic.twitter.com/My772r9ZIJ