சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டான் திரைப்பத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் ஜலபுலஜங்கு என்ற இந்தப் பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, சூரி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படம் கல்லுாரி பின்னணியில் உருவாகியுள்ளது.