
'ரட்சகன்' படத்தில் நாயகியாக நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஏராளமான ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் உருவான ஆர்யா என்ற இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது குறைவான ரோமன் சால் என்பவரை காதலித்து வந்தார்.
இதையும் படிக்க | 'விக்ரமா இது?' 'கோப்ரா'வுக்காக மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் விக்ரம் (புகைப்படம்)
இருவருக்கும் இடையில் பிரச்னை உருவானதன் காரணமாக பிரிந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரோமன் சாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நாங்கள் நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்கு இடையிலான உறவு முடிவுக்கு வந்துவிட்டது. அன்பு தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...