
மாஸ்டர் படத்தில் தோனி குறித்து விஜய் பேசிய வசனம்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்
மாஸ்டர் படத்தில் தோனி குறித்து விஜய் பேசிய வசனம் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி அடுத்த 16வது நாளில் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமிலும் மாஸ்டர் வெளியானது.
இரண்டு தளங்களிலும் வெளியான போதிலும் மாஸ்டரின் வெற்றியோட்டம் குறையவில்லை. இந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட 5 நிமிடக் காட்சியை அமேசான் ப்ரைம் அண்மையில் வெளியிட்டது.
அதில் ஒரு காட்சியில் மாணர்களிடம் தோனி குறித்து விஜய் பேசிய வசனம் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம் என்று விஜய் குறிப்பிடுகிறார்.
படத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த காட்சி யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.