கோப்புப் படம்
கோப்புப் படம்

50 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்கள்: சென்னை திரையரங்குக்கு ரூ. 5,000 அபராதம்!

சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததால் இரு பிரிவுகளில்...

அரசின் உத்தரவை மீறி 50 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததால் சென்னை காசி திரையரங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தார்கள். மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஷாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், நடிகை மாளவிகா போன்றோர் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து இன்றைய காலைக் காட்சியைக் கண்டுகளித்தார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளார். 

இந்நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததால் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திரையரங்க நிர்வாகத்துக்கு ரூ. 5000 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்ததுடன், தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துக்கு உள்துறை செயலாளா் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தாா்.

இதனிடையே, தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை கவனத்தில் கொண்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகளில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com